Song Request

Welcome To Tamilan FM , Send Ur Song Request

உன் பார்வை போதும் | Un Paarvai Podhum - Anbe Anbe Song From Darling | Lyrics in Tamil



உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் !!!

2 comments: